குருக்கள்மடம் கடற்கரை அருகே காட்டுத்தீ – இளைஞர்கள் கட்டுப்படுத்தினர்!
tamil news:
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி காவற்துறை எல்லைக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில், கடற்கரை அருகே உள்ள சவுக்குமரங்கள் அடர்ந்துள்ள காட்டுப் பகுதியில் நேற்றையதினம்(13.05.2025) பிற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தால் இயற்கையான கடற்கரைப் பகுதியும்,
பல மரங்களும் தீயால் சேதமடைந்துள்ளன.
ஆனால் தீ வேகமாக பரவத் தொடங்கியதை அறிந்ததும் அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இதற்கு முன்னரும் இதே பகுதியில் இதைப்போன்று ஒரு தீவிபத்து ஏற்பட்டுள்ளதெனவும்,
தற்போது ஏற்பட்டுள்ள தீப்பரவல் ஒரு திட்டமிட்ட நிகழ்வாக இருக்குமா என்ற சந்தேகத்துடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


