தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு!
tamil news:
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கவேண்டியதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏழு நாட்களுக்குள் குறித்த பட்டியல் உறுப்பினர்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறும் கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பெண் உறுப்பினர்களை தெரிவுசெய்வதில் வழிகாட்டல் விதிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பட்டியலில் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டவுடன்,
வட்டாரதேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களுடன் இணைத்து வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜூன் 2ம் திகதி முதல் உள்ளுராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
