வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

நீண்டதூர பேருந்து சேவைகள்: சாரதிகள் மீதான கவனம் தீவிரம்!


tamil news:
நீண்டதூரப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.


றம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தை அடுத்தே இந்த விடயம் தொடர்பாக அவசரமான கவனம் தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


கதிர்காமம் – குருநாகல் பாதையை உடைய இந்த சேவை நீண்டநேர பயணமாக இருப்பதால் இத்தகைய போக்குவரத்து வழித்தடங்களில் கடமைப்பார்க்கும் சாரதிகள் பராமரிக்கப்படவேண்டிய முக்கியமான அம்சங்களை அவர் வலியுறுத்தினார்.


குறிப்பாக அவர்களுக்கு போதுமான ஓய்வு, ஒழுங்கான தூக்கம் மற்றும் பயணத்தின்போது இடைநிறுத்தங்களில் ஓய்வெடுக்க வசதிகள் உள்ளதா என்பன கவனிக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.


அதேநேரத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியதாயும்,

இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.