வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இன்றைய வளிமண்டல நிலவரம்! வெளியான அறிவிப்பு


weather news:

தென்மேற்கு பருவமழை காரணமாக சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பரவலாகவே பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும் வடமத்திய மாகாணத்தின் பல இடங்களில் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும்.


ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மாலை அல்லது இரவுப் பொழுதுகளில் இடியுடனான மழை காணப்படக்கூடும்.


மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் மழைக்காலங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும், மின்னலுடனான மழையும் காணப்படும் வாய்ப்பு உள்ளது.


மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.