22 கஜமுத்துக்களுடன் இருவர் கைது – ஒருவர் முன்னாள் காவற்துறை!
tamil news:
மட்டக்களப்பின் ஏறாவூரில் தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவராக முன்னாள் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து,
மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவின் காவற்துறை பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(21.05.2025) காலை 11.00 மணியளவில் ஏறாவூர் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அந்தச் சமயத்தில் சந்தேகத்திற்குரியநபர் ஒருவன் 4 கஜமுத்துக்களுடன் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மறைவாக இருந்த காவற்துறையினராலி கைதுசெய்யப்பட்டுள்ளான்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில்,
இவருக்குக் கஜமுத்துக்களை வழங்கியதாகக் கூறப்படும் அம்பாறைச் சாய்ந்தமருதைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர்,
மாலை 5.00 மணியளவில் 18 கஜமுத்துக்களுடன் ஏறாவூரில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், 57 வயதுடைய ஏறாவூரைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது பொலிஸ் சேவை 2005 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

