முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் தென்னிலங்கை சிங்களச் சட்டத்தரணியின் பங்களிப்பு: எழுத்தாளர் ஐ.வி. மாகாசேனனின் பாராட்டு
tamil news:
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில்,
தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்களச் சட்டத்தரணி வடமராட்சிக்கு வந்து தமது சொந்த மொழியில் தமிழர்களின் வேதனைகளை வெளிப்படுத்திய சம்பவம் மிகவும் முக்கியமானதாகும் என எழுத்தாளர் ஐ.வி. மாகாசேனன் தெரிவித்துள்ளார்.
பிறிதொரு ஊடகம் ஒன்றிற்கு கருத்துதெரிவித்த அவர்,
"16 ஆண்டுகளாக தமிழர்கள் சுமந்துவரும் வேதனையின் ஆழத்தை இந்த செயல் ஒரு வகையில் பிரதிபலிக்கின்றது.
இந்தச் சகோதரரின் மனதாரச் செயலை பாராட்டவேண்டிய கடமையுடன் நாம் இருக்கின்றோம்."
என கூறினார்.
அத்துடன்
"இன்னும் சில இனவாத போக்குகள் சமூகத்தில் காணப்பட்டாலும்,
எங்களை உணரவிரும்பும் மனதுள்ளோர் இருப்பது ஒரு நம்பிக்கையைக் கொடுக்கின்றது."
என அவர் சுட்டிக்காட்டினார்.
