வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ரணிலுடன் கூட்டணியா? நாமல் தரப்பின் விளக்கம் வெளியாகியது!


tamil news:

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இனவழிப்பை மேற்கொணட குடும்ப வாரிசு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் பெரும்பான்மையை பெற்றுள்ள குழுக்களின் அடிப்படையிலேயே ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.


மேலும் எதிர்க்கட்சிகள் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள சபைகளில் அவர்களுடைய உறுப்பினர்களுக்குப் பதவிகள் வழங்குவதற்கு தாமதமின்றி ஆதரவு வழங்கப்படுமெனவும் கூறினார்.


"பயத்தில் இருந்து அரசியல் முடிவுகள் எடுப்பதில்லை"

அதனைத் தொடர்ந்தும் நாமல் கூறுகையில்,

"எம்மை அச்சுறுத்தி எதையாவது முடிவெடுக்கச் செய்யும் எண்ணம் யாருக்கேனும் இருந்தால்,

அது சாத்தியமில்லை.


நாம் எப்போதும் மக்களின் தீர்மானத்தையே மதிக்கின்றோம்.


பொய்யான குற்றச்சாட்டுகள் மூலமாக எங்களை குறைக்க முயற்சித்தாலும்,

அதற்கும் தயாராகத்தான் இருக்கின்றோம்.


நல்லாட்சிக் காலத்திலும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கின்றோம்."

என்றார்.


அரசியல் பேச்சுவார்த்தைகளில் தீவிர ஈடுபாடு.

உள்ளூராட்சி சபை அமைப்பை முன்னெடுக்க கட்சிகள் இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.


இந்த விவகாரத்தில் முக்கிய கட்சிகளுடன் கூட்டு ஆலோசனைகள் நடந்து வருகின்றது.


சட்டம் ஒழுங்குகளின் அடிப்படையில் பெரும்பான்மையுடைய தரப்பைத் தழுவி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுவான அணுகுமுறை என்று அவர் சுட்டிக்காட்டினார்.


ரணிலிடம் இருந்து வந்த அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பிலிருந்து ஆலோசனைக்காக அழைப்பு வந்ததையடுத்து,

கட்சியின் செயலாளர் வெளிநாட்டில் இருந்ததால் அந்த சந்திப்பில் கலந்து கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்ததாக நாமல் கூறினார்.


மாறுபட்ட தேர்தல் சட்டங்களில் கருத்து வேறுபாடுகள்!

2018க்கு முன்னர் அறிமுகமாகியுள்ள உள்ளூராட்சி தேர்தல் முறைமை குறித்து நாமல் விமர்சனம் செய்தார்.


அப்போதைய சூழ்நிலையில் எதிர்கட்சிகள் ஆதரித்த அந்த முறைமை இன்று அரசுக்கு எதிராக அமைகின்ற நிலையில் அவர்களே அதை மறுக்கின்றனர் என்றார்.


மக்கள் தீர்மானமே முக்கியம்

"எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது போல் ஒரு நடைமுறையைத் தவிர்த்து,

கட்சி செயலாளர்களுடன் உரிய ஆலோசனைகள் நடத்தி மக்கள் விருப்பத்தைக் கருத்திற்கொண்டு ஆட்சி அமைக்கவேண்டும்."

என நாமல் தெரிவித்தார்.


தற்போது 38 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றுள்ளதோடு,

அந்த வெற்றியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 உறுப்பினர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்திய பிறகு,

அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.