யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி திருடிய சந்தேகநபர் கைது!!! – உரிமையாளர்களிடம் காவற்துறையினர் வேண்டுகோள்
tamil news:
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த துவிச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவங்களில் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் முக்கிய சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
குருநகர் பகுதியில் வசிக்கும் 40 வயதான நபர் ஒருவர் இச்சம்பவங்களுடன் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது ஹெரோயின் மாதிரிகள் மற்றும் பல திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 16 துவிச்சக்கரவண்டி – அதாவது ஆண்கள் பயன்படுத்திய 5 மற்றும் பெண்கள் பயன்படுத்திய 11 வண்டிகள் – நல்லூர், யாழ்ப்பாண நகரம், கே.கே.எஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவற்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருடப்பட்ட வண்டிகளின் உரிமையாளர்கள் தங்களது உரிமை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் முன்னிலையாகி,
உரிய முறையில் தங்கள் வண்டிகளை மீட்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

