வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பிரித்தானியா - உக்ரைன் இடையே 100 ஆண்டிற்கான நட்புறவு ஒப்பந்தம்! ரஷ்யா கவனம்


tamil news: இன்றையதினம்(16.01.2025) உக்ரைனுடன் 100 ஆண்டுகளுக்கான நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starmer) கையெழுத்திடவுள்ளார்.


அதாவது,

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றுள்ளநிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு இன்று(16.01.2025) மேற்கொண்டுள்ளத சுற்றுப்பயணத்தின் முக்கிய அம்சமாக உக்ரைனிற்கும் பிரித்தானியாவிற்குமிடையே சுமார் 100 ஆண்டுகளுக்கான புதிய நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார்.


அந்தவகையில் இந்த 100 ஆண்டுகால ஒப்பந்தமானது உக்ரைனுடனான பிரித்தானியாவின் வலுவான ஆதரவை உறுதிப்படுத்துவதாக அமையும் எனவும், இவ் ஒப்பந்தம் தொடர்பான அரசியல் பிரகடனம் வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் எனவும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.


மேலும் உக்ரைனை அதன் கூட்டாளிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் திட்டங்கள் தோல்வியடைந்திருப்பதாகவும், உக்ரைன் அதன் கூட்டாளிகளின் நட்புறவு முன்பைவிட தற்போது வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.