மன்னாரில் பாதுகாப்பு கெடுபிடி; வாகனங்களும் சோதனை!!!
tamil news: மன்னாரிலிருந்து பிரதான பாலத்தை கடந்துவரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைசெய்யப்படுவதுடன் பாதுகாப்புக் கெடுபிடிகளை பாதுகாப்புப் பிரிவினர் அதிகரித்துள்ளனர்.
அதாவது,
இன்றையதினம்(16.01.2025) மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை கைதுசெய்யும் நோக்கில் மன்னார் முழுவதும் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.
வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 ஆண்களுடன் பெண்ணொருவருமாக 4 பேர் படுகாயமடைந்தநிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த ஆண்களில் 2 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள்(61 வயது) மற்றும் செல்வக்குமார் யூட்(42 வயது) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

