இலங்கை சீனாவுடன் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்து!
tamil news: இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சுமார் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.
அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சீன சனாதிபதி சீ ஜின்பிங் இற்கும் இடையே பொருளாதாரம், ஊடகம், கல்வி மற்றும் கலாசாரத் துறைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தானதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவிற்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சீன சனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்றையதினம்(15.01.2025) பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்

