வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு! இருவர் பலி(காணொளி)


tamil news: இன்று(16.01.2025) காலை மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியில் ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ம் திகதி சகோதரர்கள் இருவரை குறிப்பிட்ட ஒரு தரப்பு படுகொலை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து குறித்த கொலை தொடர்பான வழக்குவிசாரணை மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றநிலையில் இன்றும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவிருந்தது.


இதன்போது படுகொலை தொடர்பில் சாட்சியமளிக்க வந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிசென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வரும்நிலையில் அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றதையடுத்து மன்னார் காவற்துறை விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.