துருக்கி ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து; 66 பேர் பலி.. (காணொளி)
tamil news: துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியிலுள்ள 'போலு' மாகாணத்தில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
'போலு' மாகாணத்தில் சுமார் 12 மாடி ஹோட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது.
தற்போது துருக்கியில் 2 வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் குறித்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், இன்றையதினம்(21.01.2025) இந்த ஹோட்டலில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 66 பேர் பலியாகியுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்ததாக அங்கிருந்துவரும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஹோட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகவும்,
தீ விபத்து ஏற்பட்டதையறிந்து ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் சிலர் சன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்கமுயன்றதாகவும்,
அதில் சிலர் கீழேவிழுந்து உயிரிழந்ததாகவும் உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹோட்டல் துருக்கியின் தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 170Km தொலைவிலமைந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதையறிந்து பல்வேறு மந்திரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
