வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வரலாற்றில் முதன்முறையாக காவல்நிலையங்களில் விசேட அதிரடிப்படை!


tamil news: இன்றுமுதல்(21.01.2025) துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை தடுக்கும் நோக்கத்திற்காக கொழும்பு நகரிலுள்ள காவல்நிலையங்களுக்கு காவற்துறை விசேட அதிரடிப்படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதாவது இந்த ஆண்டுமாத்திரம் குற்றப்பின்னணி கொண்ட கும்பல்களுக்கிடையே சுமார் 7 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் சுமார் 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


அந்த படுகொலைகளில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் பதிவாகியுள்ளன.


இவ்வாறான பின்னணியில் இவ்வாறான துப்பாக்கிச்சூடுகளை தடுப்பதற்கு உதவி தேவை என அடையாளங்காணப்பட்ட காவல்நிலையங்களுக்கு விசேட அதிரடிப்படையின் சிறிய குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.


இவ்வாறு காவல்நிலையங்களுக்கு விசேட அதிரடிப்படையினரை அனுப்பப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அவசர வீதித்தடைகளை நிறுவுவதன் மூலம், காவற்துறை விசேட அதிரடிப் படையினரை நிறுத்துவதுடன் நடமாடும் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.