வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஒரே இரவில் 7 கோள்கள் வானில் தெரியவுள்ள அதிசயம்!


tamil news: ஒரே நாள் இரவில் 7 கோள்களும் காட்சிதரும் அதிசய நிகழ்வு அரங்கேறவுள்ளது.


எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி அன்று இரவு வானில் ஏற்கனவே காட்சிதரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணைந்து காட்சிதரும்.


7 கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம்.


இந்த சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தெளிவான இரவுநேரத்தில் வானத்தை பார்த்தால் ஒரு விருந்து காத்திருக்கும்.


வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என 6 கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன.


பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து 7 கிரகங்களின் வரிசை வானில் காட்சிதரும்.


இது வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமான காட்சியல்ல; இது சூரிய மண்டலம் குறித்த புதிய புரிதல்களையும் தரும் சாத்தியக்கூறுகள் உள்ளன.


சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருகின்றன.


சூரியனுக்கு மிக அருகிலிருக்கும் புதன்கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவுசெய்கின்றது.


அதாவது புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள், பூமியின் ஆண்டு 365 நாட்கள் அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள்; அதாவது சுமார் 165 பூமி ஆண்டுகள் ஆகும்.