வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

சமஷ்டி முறையிலான தீர்வையே அரசியற்தீர்வாக வலியுறுத்துகிறோம்! சுமந்திரன்


tamil news:

"இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியமான அரசியற்தீர்வாக சமஷ்டி முறையிலான ஆட்சியையே வலியுறுத்துகிறோம்"

இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான M.A சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இன்றையதினம்(18.01.2025) திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


வெர் மேலும் தெரிவிக்கையில்,

"கட்சியின் ஒரே இலக்கு சமஷ்டிமுறை தீர்வு.


தற்போது ஒற்றையாட்சி என்றால் என்ன சமஷ்டி முறை என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் தெரிகின்றது.


70 வருடகாலமாக பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளபோதிலும் அரசியற்தீர்வாக இதனையே வலியுறுத்திவருகின்றோம் .


கோத்தபாய அரசாங்கத்தில் இது தொடர்பான வரைபை வரைந்து இதுகுறித்த தீர்வு தொடர்பில் முன்மொழிவுகளை 2020 டிசம்பர் மாதமளவில் அந்த குழுவுக்கு அனுப்பியிருந்தோம்.


இதில் மறைந்த தலைவர் இரா.சம்மந்தன் இசேனாதிராஜா, சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்றோர் கையொப்பமிட்டு அனுப்பப்பட்டு சந்திப்பு நடத்தப்பட்டது.


இதனைத்தொடர்ந்து தற்போது 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.


இவர்கள் இந்த விடயங்களுக்கு பொறுப்பாக செயற்படுவார்கள் 


மேலும்,

கட்சியின் வழக்குகளும் நிலுவையில் உள்ள அத்தனை வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் பேசப்பட்டதுடன்,

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அதிகமாக முன்னுரிமை அடிப்படையில் முன்னர் வேட்புமனு தாக்கல் செய்தவர்களை பட்டியலில் இணைப்பதுடன்,

இளைஞர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பாக பேசப்பட்டது."

என குறிப்பிட்டார்.


மேலும்

"கட்சிக்கெதிராக செயற்பட்டவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் பேசப்பட்டநிலையில் முதன்முதலில் அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.


ஜனாதிபதியின் இந்திய விஜயம் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது இடதுசாரி கொள்கை கொண்ட இவர்கள் சீனா,இந்தியா தொடர்பில் எப்படி செயற்பட போகிறார்கள் என்பது பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்"

எனவும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.