வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஜே.வி.பியின் கருத்துக்கு அரசியல் ஆய்வாளர் கண்டனம்!


tamil news: இலங்கையில் அரசியற்கைதிகள் என்று யாருமில்லை என ஜே.வி.பியின் நீதியமைச்சர் தெரிவித்ததிற்கு அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சட்டத்தரணி ஜோதலிங்கம் அவர்கள் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.


இன்றையதினம்(18.01.2025) யாழ்ப்பாணத்திலுள்ள தன்னுடைய அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

"அண்மையில் ஜே.வி.பியின் நீதியமைச்சர் இலங்கையில் அரசியற்கைதிகள் என்று எவருமில்லை என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களே உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். 


நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் தமது சுயநலத்துக்காக போராடவில்லை.


அவர்கள் தமது  இனத்துக்காக போராடியவர்கள், அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் அரசியற்கைதிகள்"

என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர்

"இலங்கை தமிழரசுக்கட்சி என்பது தமிழ் மக்களுடைய ஒரு அரசியல் இயக்கமாகும்.


அதன் மத்திய குழுவில் இருப்பவர்கள் ஒரு நம்பிக்கை பொறுப்பாளர்கள், அவர்கள் தவறிழைக்கின்றபோது மக்கள், சிவில் சமூகங்கள் தலையிடவேண்டியது காலத்தின் கட்டாயம்"

என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.