தைவானில் முதன்முறையாக நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை! மனிதவுரிமை அமைப்புக்கள் கண்டனம்
tamil news: தைவான் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக சான்சாங் மாவட்டத்தைச்சேர்ந்த ஹுவாங் லின் காய்(வயது 32) என்பவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
2013ம் ஆண்டு தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயை கொடூரமாக கொலைசெய்த வழக்கில் 2017ம் ஆண்டு நீதிமன்றம் இவருக்கு மரணதண்டனை விதித்தது.
இதனையடுத்து சட்ட அமைச்சரின் ஒப்புதலுடன் 'தைபே' தடுப்பு மையத்தில் துப்பாக்கியால் சுட்டு இவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நீதித்துறை, ஹுவாங் ஈடுபட்ட குற்றம் மிகவும் கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என தெரிவித்ததுடன் கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை மிகவும் பொருத்தமான தண்டனை என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் லகளாவிய மனித உரிமை குழுக்கள், இந்த மரணதண்டனை தைவானின் மனித உரிமை பதிவிற்கு பெரும் களங்கம் என கண்டித்துள்ளன.
தைவானில் மரணதண்டனை இன்னும் சட்டப்பூர்வமாக இருந்தாலும் கடந்தசில ஆண்டுகளாக இதற்கான எதிர்ப்பு வலுத்துவருகின்றது.
மேலும் மரணதண்டனைக்கு மாறாக ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
