மட்டக்களப்பில் கடும் மழை! திறக்கப்பட்ட வான்கதவுகள்
tamil news: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துவரும் நிiலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் பிரதான குளங்களான உன்னிச்சைக்குளம் நிரம்பியநிலையில் 2 ஐnஉh நீர் வான் பாயும் நிலையில் குளத்தின் 3 வான் கதவுகளும் 05 அடி திறக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ரூகம் குளம் 7 ஐnஉh வான்பாயும் நிலையில் 2 வான்கதவுகள் 07 அடிகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் நவகிரி குளத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
தற்போது நெற்செய்கை அறுவடைக்காலம் ஆரம்பமாகியுள்ளநிலையில் மழைபெய்து வருவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லத்தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன்,
மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
