வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஒட்டுசுட்டான் பகுதியில் ஆடுகளை கடித்ததாக கூறி வளர்ப்பு நாய் கொலை?


tamil news: ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் நடந்த சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது,

ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் வசிக்கும் சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார்.


இந்த சம்பவம் ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டுசெல்லப்பட்டது.


இதன்போது குறித்த பெண் 3 வருசமாக இந்த பிரச்சினையை சந்தித்து வந்ததாகவும், இதுவரை சுமார் 11 ஆடுகள் குறித்த நாயால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


இணக்கசபையிலிருந்த இருவர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்தநிலையில் குறித்த நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.



அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.


அந்த சந்தர்ப்பத்தில் குறித்த இருவரும்

"குறித்த நாயை நீ கொன்றாலும் சரி, எங்கயாவது கொண்டுபோய்விட்டாலும் சரி, இனி நாய் பிரச்சினை என்று வரக்கூடாது என்று கூறியுள்ளார்கள்."

என பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.


அதன் பின்னர் ஆட்டின் உரிமையாளர் குறித்த நாயை கயிறைக்கட்டி கொண்டுசெல்லும்போது அந்த நாய் அட்டகாசம் செய்ததாகவும்,

அதன்பின் அவர் மரத்தில் அதை கட்டியபோது கயிறு இறுக்கி உயிரிழந்ததாகவும் ஆட்டின் உரிமையாளரால் கூறப்பட்டுள்ளது.


ஆனால் அதன்போது எடுக்கப்பட்ட படத்தில் நாய் கொலைசெய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.



மேலும் மிருகவதை சட்டத்தின்கீழ் இப்படி ஒரு நாய் தூக்கில் போட்டு கொல்லப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாதொன்றாகும்.


கீழே உள்ள காணொளியில் பாதிக்கப்பட்டவர்கள் பிறிதொரு ஊடகத்திற்கு தங்கள் கருத்தைக் கூறியுள்ளார்கள்.