உலகநாடுகள் பலதுக்கான நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா! ட்ரம்ப் அதிரடி
tamil news: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20ம் திகதி பதவியேற்றநிலையில் பல உலகநாடுகளுக்கான நிதியுதிவியை இடைநிறுத்தியுள்ளார்.
அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதக்குடியேற்றத்தை தடுக்க அமெரிக்காவுக்கும் மெக்சிகோக்கும் இடைப்பட்ட எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் உலகசுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2023ம் ஆண்டு இதற்காக சுமார் 60 பில்லியன்(அமெரிக்காவின் வரவுசெலவுத்திட்டத்தில் 1%) ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
