நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்!உரிமையாளர் கைது!
tamil news: நாயை தூக்கிலிட்டுகொன்ற சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு, மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலாகி பலரின் கண்டனத்தையும் பெற்றநிலையில்,
ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907ம் ஆண்டு இலக்கம் 13ம் இலக்க விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதை தடுக்கும் கட்டளைச்சட்டத்தின் கீழ் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மேலும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
