தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களால் வெறுக்கப்படுகிறது! சமன் ரத்னப்பிரிய
tamil news:
"மிகக் குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி திகழ்ந்து வருகின்றது."
இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(16.01.2024) கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஐக்கியதேசிய கட்சி ஏற்பாடுசெய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"கடந்த அரசாங்க காலங்களில் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டதுடன் அந்த ஒப்பந்தங்களின் நன்மைகள் தொடர்பில் அரசாங்க ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துவது வழமை. ஆனால் அவ்வாறான எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
ஆனால் அரசாங்கம் சீனாவுடன் 15 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லாமையால் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.
அதனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களை கடந்துள்ள நிலையில்,
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற அவர்களுக்கு முடியாமல் போயிருக்கின்றது.
அதேநேரம் அரச துறைகள் அனைத்தும் இன்று வீழ்ச்சியடைந்து மக்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது."
என குறிப்பிட்டார்.
மேலும்,
இதற்கு சிறந்த உதாரணம்தான் தற்போது நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்றுவரும் அதிகமான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
