கனடா-ரொறன்ரோவில் கடும்குளிர்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
tamil news: கனடா நாட்டின் ரொறன்ரோ மாகாணத்தில் இந்த வாரஇறுதியில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என காலநிலை எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதாவது கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆர்க்டிக் காற்று வீசுவதாலேயே இந்த கடுமையான குளிர் நிலவும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் இன்று(18.01.2025) பிற்பகலில், பகல் வெப்பநிலை அதிகபட்சம் -4 C ஆக குறையும், இது -10 C அளவில் உணரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரப்பதனின் அளவு அதகிரிப்பதனால் ஞாயிறன்று -20 C வெப்பநிலையை உணரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்க்டிக் காற்றின் ஊடுருவல் அடுத்த வியாழக்கிழமை(23.01.2025) வரை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
வெளிநாட்டு செய்திகள்
