வெப்ப அலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!!
tamil news:
நாட்டின் பல பகுதிகளில் நாளையதினமி(27.04.1015) வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம்(26.04.2025) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனிதர்களால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் குறிப்பிட்ட நிலையை எட்டக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இந்த அதிகப்படியான வெப்பம் பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும்,
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.