உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
tamil news:
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.doenets.lk/examresults இல் பிரவேசித்து பார்வையிடமுடியும்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர,
இன்றையதினம்(26.04.2025) உயர்தர பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை இந்த பரீட்சை நாடு முழுவதும் நடைபெற்றது.
மொத்தம் 333,185 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றினர்.
இவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்களாகவும்,
79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகவும் இருந்தனர்.
இந்த உயர்தரப்பரீட்சைகள் 2,312 பரீட்சை மையங்களிலும்,
319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.