இந்தியாவில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய பலர் கைது!!!
tamil news:
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 1,000க்கும் மேற்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில் அகமதாபாத்தில் மட்டும் 890 பேர்,
சூரத்தில் 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்தியாவில் நுழைந்தவர்களே அதிகம் என்பதை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நடவடிக்கை குஜராத் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சட்ட அமலாக்க நடவடிக்கையாக மதிப்பீடு செய்யப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் இன்னும் பல பங்களாதேஷ் குடியினர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும்,
அவர்களில் சிலர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்துடன் கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது மட்டும் 127 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டதோடு,
அவர்களில் நால்வர் தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்தது.