பாகிஸ்தான் விமானநிலையத்தில் பரவியது தீ!!! இந்தியாவின் பதிலடி ஆரம்பம்?
tamil news:
பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமானநிலையத்தில் இன்றையதினம்(26.04.2025) திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்சமயம் கிடைத்துள்ள தகவல்களின்படி,
பாகிஸ்தான் இராணுவத்தினைச் சேர்ந்த ஒரு விமானம் தரையிறங்கும்போது அதன் டயர் தீப்பற்றியதன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
சம்பவத்துக்குப் பிறகு தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்துவந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளநிலையில்,
இந்நிகழ்வால் உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
ஆனால் விமானநிலையப் பகுதிகளில் கரும்புகை அடர்த்தியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.