கொழும்பில் மனைவியை கொன்று உடலை வெட்டி கால்வாயில் வீசிய கணவர் கைது!
tamil news:
கொழும்பு கிராண்ட்பாஸ் காவற்துறை பிரிவில் ஸ்டேஸ்புர பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அங்கு வசித்துவந்த 65 வயதான பெண் ஒருவர் கடந்த நாட்களில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் தெரியவந்தது யாதெனில்,
குறித்த பெண் தனது முதல் கணவர் இறந்த பிறகு தன்னைவிட வயதுகுறைந்த நபருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இருவரும் ஒருங்கிணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் 25 வயதுடைய இளைய வாலிபருடன் கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கிடையே தவறான உறவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட கோபத்தில் பெண்ணின் இரண்டாவது கணவர் கத்தியால் தாக்கி, அவரை கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை இரண்டாக வெட்டி, கழிவுநீர்க் கால்வாயில் தூக்கி வீசியுள்ளார்.
இந்த கொடூரசெயலில், பெண்ணின் மகளின் கணவரும் உடந்தையாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இருவரும் தற்போது காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.