நவம்பர் மாதம் இலங்கை பொருளாதாரம் சீரழிவுக்கு முகங்கொடுக்கும்!!! வஜிர அபேவர்தன எச்சரிக்கை
tamil news:
இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கடும் வீழ்ச்சியை சந்திக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலி தலாப்பிட்டிய பகுதியில் இன்றையதினம்(27.04.2025) நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் உரையாற்றிய அவர்,
தற்போதைய நிலவரங்களையும், தனது பொருளாதார அறிவையும் கருத்திற்கொண்டு நவம்பர் மாதம் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு ஏற்படும் என தன்னம்பிக்கையுடன் கூறினார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாடு கடுமையான நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலையில் பொதுமக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.