படுகொலைகளை தடுக்கும் வகையில் அரசு மாறவேண்டும் – மஹிந்த தேசப்பிரிய
tamil news:
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் படுகொலைச் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூடுகள் உள்ளிட்ட தீவிர குற்றச்செயல்கள் நாடெங்கிலும் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த அவர்,
இவைகளை தடுக்கும்நோக்கில் காவற்துறைத்திணைக்களம் மற்றும் புலனாய்வுப்பிரிவு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
"ஒரு சம்பவம் நடைபெறுவதற்குப் பிறகு அதை ஆராய்வது முக்கியமல்ல; அது நடைபெறுவதற்குமுன் தடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கியபொறுப்பு"
என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உயிர் ஆபத்துக்கு உள்ளவர்கள் தங்களைத்தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதும் இன்றியமையாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி யாரேனும் கொலை செய்யப்பட்டால் அது தவறே எனவும் எந்தவொரு சூழ்நிலையிலும் கொலைக்கான அனுமதி இருக்கமுடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த சூழ்நிலையை ஆழமாக கவனித்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் அவர் அழுத்தமாக கூறியுள்ளார்.
மேலும் முக்கிய குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக காவற்துறையினரை அசிங்கமான வேலைகளுக்காக பயன்படுத்தப்படுவது கவலையளிக்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தனது வீட்டில் நான்கு தடவைகள் திருடர்கள் புகுந்தும் இதுவரை எந்தக் குற்றவாளியும் கைதுசெய்யப்படவில்லை என்பது அவரது சொந்த அனுபவம் எனவும் அவர் தெரிவித்து அரசின் செயலற்ற தன்மையை சுட்டிக்காட்டினார்.