ரம்பொட பகுதியில் பயங்கர விபத்து!!! இதுவரை 13 பேர் பலி
tamil news:
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் இன்றையதினம்(11.05.2025) அதிகாலை ஏற்பட்ட கோரமான வாகனவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியை அண்மித்து நிகழ்ந்த இந்த விபத்தில்,
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
பேருந்து கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகலை நோக்கி பயணித்ததாக கூறப்படுகின்றது.
இதில் 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட முதலில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
அவர்களுள் பலர் அவசரசிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து காவற்துறையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


