மத்திய வங்கியின் ஏலம் குறித்த புதிய அறிவிப்பு!
tamil news:
இலங்கை மத்திய வங்கி புதிய திறைசேரி உண்டியல்கள் தொடர்பாக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் குறித்த அறிவிப்பின் படி,
மொத்தம் 173,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் மே 14ஆம் திகதி ஏல முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதில் 91 நாட்கள் காலம் கொண்டுள்ள 30,000 மில்லியன் ரூபா பெறுமதியிலான உண்டியல்கள்,
182 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட 70,000 மில்லியன் ரூபா மதிப்புடைய உண்டியல்கள் மற்றும்
364 நாட்கள் முதிர்வுக்காலத்துடன் கூடிய 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஆகியன அடங்குகின்றன.
அனைத்து திறைசேரி உண்டியல்களும் குறித்த நாள் ஏலத்தின் மூலம் வாங்க விரும்புபவர்களுக்கு வழங்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Labels:
வணிக செய்திகள்
