குழந்தைகளை பாதிக்க ஆரம்பித்திருக்கும் 3 தொற்றுநோய்கள்!?
tamil news:
சமீபகாலத்தில் சிறுவர் சமூகத்தில் மூன்று முக்கிய வைரஸ் தொற்றுகளின் பரவும் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என சுகாதார வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
என்ன நோய்கள்?
இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ் நோய்கள் குழந்தைகளிடையே வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காரணமாக இருப்பது என்ன?
பண்டிகை காலங்களில் குழந்தைகள் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக வெளியே அதிகமாக செல்லும்நிலையில் வைரஸ் பரவலுக்கு வாய்ப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கெல்லாம் பாதிப்பு?
மழைக்காலத்தில் நிலவும் ஈரப்பதம் மற்றும் நுளம்புகளின் எண்ணிக்கையால் இந்த நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதுடன்,
வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட தொற்றுகளும் குழந்தைகளில் அடிக்கடி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை
சிறார்களை இந்தத் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க, சுத்தம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் என சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.