நல்லூர் ஆலயத்தை ஒட்டி செயற்படும் அசைவ உணவகத்துக்கு தடை கோரிய சைக்கிள்!
tamil news:
யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் திறக்கப்பட்டுள்ள புதிய அசைவ உணவகம் தொடர்பில் சமூகத்திலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச்சந்தர்ப்பத்தில் குறித்த உணவகத்துக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழ்த்தேசியமக்கள் முன்னணி சார்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளருக்குக் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
"தீட்சையான ஆன்மீக சூழலுக்குப் பெயர் பெற்ற நல்லூர் கோவிலின் அருகாமையில்,
சைவமரபுகளுக்கு முரணான வகையில் மாமிச உணவகம் செயற்படுவது,
பக்தர்களின் உணர்வுகளுக்கும் ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக பலரும் எங்களை அணுகி கவலை வெளியிட்டுள்ளனர்.
அதனால் அந்த மாமிச உணவகத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும்."
எனக் கோரப்பட்டுள்ளது.