மீண்டுமொரு துயரம்: நீராடச் சென்ற சிறுமிகள் உயிரிழந்தனர்!
tamil news:
குருநாகல் மாவட்டத்தில் உள்ள கல்கமுவ – பலுகடவல பகுதியில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் நீராடச்சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இன்றையதினம்(13.05.2025) மதியநேரத்தில் இந்த துயரமான சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
சம்பவத்தின்போது அப்பகுதியில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்றிருந்த சிறுமிகள்,
அருகிலுள்ள ஏரியில் நீராட முயற்சித்த நிலையில் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
மூழ்கி உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 17 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமிகளின் உடல்கள் கல்கமுவ அரசு வைத்தியசாலையில் வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
