ஆனையிறவு உப்பிற்கு கொக்கரித்த ஜேவிபி... நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட உப்பு பற்றாக்குறை?
tamil news:
சந்தையில் உப்பு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடு குறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்ததாவது,
"நாட்டுக்கு இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட 30 மெட்ரிக் தொன் உப்பு இப்போது வரையிலும் கிடைக்காததால்,
சந்தையில் உப்பு பற்றாக்குறை உருவாகியுள்ளது."
எனக் கூறினார்.
மேலும் எதிர்வரும் வாரத்தில் உப்பு இருப்பு நிலைமைகள் மேம்படும் எனவும்,
தற்போதைய குறைபாடு நேர்மறையாகக் கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விலை உயர்வு குறித்து எதிர்ப்பு
தற்போது ஒரு கிலோகிராம் உப்பிற்கு ரூ.450 முதல் ரூ.500 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இசனையடுத்து சந்தை நிலைமைகளை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் அசேல பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

