பஹல்காம் தாக்குதலுக்குப் பின் – மோடியின் வாக்குறுதி நிறைவேறியதா?
tamil news:
இந்தியா-பாகிஸ்தான் உறவு சில நாட்களாக சற்றே மென்மைப்போக்கை அடைந்தது போலவே தெரிந்தாலும் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் அந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் யார்?
அவர்கள் எதிர்பார்த்த தண்டனை பெற்றார்களா?
என்பது போல பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனங்களில் எழுந்துள்ளன.
இதுகுறித்து தெளிவான விளக்கம் சம்மந்தப்பட்ட இரு நாடுகள் சார்பிலும் விளக்கமளிக்கப்படவில்லை.
இந்நிலையில் மத்தியஸ்த முயற்சிகள் மூலமாகவே சமாதானம் எட்ட முடியும் எனக் கூறப்பட்ட சூழலில்,
மூன்றாம் தரப்பு நாட்டின் தலையீடு இந்தியாவால் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த கட்டத்தில், புதிய பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறுவதையடுத்து இன்னும் பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

