பொதுமக்களுக்கு காவற்துறையின் அவசர எச்சரிக்கை!!!
tamil news:
வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி நாடு முழுவதும் உணவுப் பொருட்கள் மற்றும் பிற தேவையான பொருட்கள் தானமாக வழங்கப்பட்டுவரும் சூழலில்,
இந்த நேரத்தை பயன்படுத்தி சில மோசடி செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக காவற்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது தனிப்பட்ட தரவுகளை திருடும் நோக்கில் போலியான இணையதளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு,
இலவச டேட்டா அல்லது தொலைபேசி பேக்கேஜ்கள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை நம்பி தனிப்பட்ட தகவல்களை வழங்கும்பட்சத்தில்,
உங்கள் வங்கி விபரங்கள் ஒரே முறையில் வரும் OTP குறியீடுகள் உள்ளிட்ட முக்கியமான தரவுகள் திருடப்படலாம் என்றும் காவற்துறையினர் எச்சரிக்கின்றனர்.
மேலும் இலங்கை காவற்துறையினரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த வகை இணையமோசடிகளைப் பற்றிய எடுத்துக்காட்டுகள், புகைப்படங்களுடன் பகிரப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத இணையதளங்கள் அல்லது செயலிகள் மூலமாக எந்தவிதமான தகவல்களையும் பகிரவேண்டாம்,
சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள்,
அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்தால் உடனடியாக காவற்துறையினர் அல்லது இணையசேவை வழங்குநரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது ஒவ்வொரு நபரின் பொறுப்பாகும் என்றும் காவற்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

