கனடாவில் சம்பவம் செய்த ஈழத்தமிழர்!!! சிங்கள பேரினவாத அரசு பெரும் அதிர்ச்சி?
tamil news:
கனடாவின் பிரம்டன் நகரில் ஈழத்தமிழர் எதிர்கொண்ட சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுத்தூபி ஒன்று நேற்றையதினம்(11.05.2025) அமைக்கப்பட்டது.
இது தமிழர் சமூகம் இரத்தம் வழியும் வரலாற்றுப்பகுதியை உலக அரங்கில் எடுத்துச்சொல்லும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.
இந்த நினைவுத்தூபி கடந்த காலத்தில் ஈழத்தில் தமிழர் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனவெறி தாக்குதல்களைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணரும் ஒரு நினைவுக்குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது.
இது சிங்கள பேரினவாத அரசிற்கு பேரிடியாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.
மேலும் இந்நிகழ்வில் பிரம்டன் நகரின் மேயராக இருக்கும் பட்ரிக் ப்ரவுன்,
"ஈழத்தமிழர்களின் வரலாற்று வலி மறுக்கப்படும் எந்தக் குரலுக்கும் கனடாவில் இடமில்லை."
என உருக்கமாகக் கூறினார்.
தொடர்ந்து நினைவுத்தூபி அமைப்பதற்கான முயற்சிகளின்போது அவர் எதிர்கொண்ட தடைகள் மற்றும் அரசியல் அழுத்தங்களைப் பற்றியும் தனது உரையில் வெளிப்படையாக தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த நினைவுச்சின்னத்தை அமைக்கும்போது சிங்கள பேரினவாத அரசின் நேரடி, மறைமுக தலையீடுகள் மற்றும் தடைகள் குறித்து பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.



