புதிதாக திருமணமான இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு!!!
tamil news:
திருமணமான ஒரு மாதத்திற்கு முன்பே யாழ்ப்பாணம் சுழிபுரம் – பெரியபுலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த ததீஸ்கரன் பரஞ்சோதி(வயது 29) என்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அதாவது,
ததீஸ்கரன் என்னும் குறித்த இளைஞர் கடந்த ஏப்ரல் 9ம் திகதி திருமணமாகியிருந்தார்.
சமீபத்தில் அவர் தனது புதிய மனைவியுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு திருமண விருந்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து ஒரு தனியார் வைத்தியரிடம் சிகிச்சை பெற்றபோதிலும் மாற்றம் இல்லாத நிலையில்,
அவர் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் வைத்தியர்கள் அவர் வரும்போதே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளில் ததீஸ்கரன் மாரடைப்பால் இறந்தமை உறுதிசெய்யப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
