நல்லூரில் அசைவ உணவகம் எதிர்ப்பு – கவனயீர்ப்பு பேரணி முற்றுகையாக மாறியது!
tamil news:
நல்லூர் ஆலயத்தை அண்மித்த பருத்தித்துறை வீதியில் இயங்கும் அசைவ உணவகத்தை எதிர்த்து, இன்றையதினம்(20.05.2025) பிற்பகலில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது.
சைவ அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டம், நல்லூர் ஆலயத்தின் முன்றலில் தொடங்கி, யாழ்ப்பாணம் மாநகர சபை நோக்கி பேரணியாக முன்னேறியது.
தொடர்ந்து குறித்த அசைவ உணவகத்தினை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அகற்றுமாறு கோசம் எழுப்பியநிலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் சிலர் மாநகர ஆணையாளர் அலுவலகத்தை சென்றடைந்து எதிர்ப்பு காரணங்களை விளக்கி கலந்துரையாடினர்.

