இலங்கையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு!
tamil news:
இலங்கையில் தற்போது அரிசி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த பருவத்தில் நெல் கொள்வனவுக்கு அரசாங்கம் தேவையான முயற்சிகளை எடுக்கத்தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக தற்போது சந்தையில் கீரி சம்பா உள்ளிட்ட பிரபலமான அரிசி வகைகளுக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரத்தில், சம்பா மற்றும் நாட்டார் அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் சாதாரண மக்களுக்கு தேவையான அரிசியை வாங்குவது சவாலாகிவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் தெரிவித்ததாவது,
கடந்த பருவத்தில் அரசாங்கத்தின் உத்தரவாத விலையை தவிர்த்து தனியார் வர்த்தகர்கள் அதிக விலைக்கு நெல் வாங்கியதாலேயே இச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்,
இதனால் குறைந்த விலையில் அரிசி வழங்குவது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அரிசி சந்தையை நிர்வகிக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும்,
அரிசி விலையை கட்டுப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
