செட்டிகுளம் பிரதேசசபைக்கு தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும்! ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி
tamil news:
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்காக தமிழரசுக் கட்சிக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி தனது ஆதரவினை வழங்க தயாராக இருப்பதாக கூட்டணியின் முக்கியக் கட்சி ஒன்றான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான க. துளசி தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(27.05.2025) மாலை வவுனியாவின் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உயர் மட்டக் குழு கூட்டத்தையடுத்து,
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவரின் மேலும் கூறுகையில்,
"செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும்,
தமிழரசுக் கட்சியும் குறிப்பிடத்தக்க ஆசனங்களை பெற்றுள்ளது.
எனவே, பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்க எமது கூட்டணி ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளது."
என்றார்.
மேலும் வவுனியா மாநகர சபையை பொறுத்தவரை சுயேட்சைக் குழுக்களும் மற்ற கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை உருவாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும்,
அதிக ஆசனங்களை பெற்ற மூன்று முக்கியக் கட்சிகள் இணைந்து நிர்வாகம் அமைக்கும் வகையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
