மன்னாரில் பெரிய அளவிலான சிகரெட் கடத்தல்; மூவர் கைது!!!
tamil news:
மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில், நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் கையாளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 168,000 சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்திக்கொண்டிருந்த மூவர் லொறி வாகனமொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைதானவர்கள் மூவரில் ஒருவர் இந்திய பிரஜையாக இருந்ததுடன்,
மீதமுள்ள இருவர் மன்னார் மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களின் வயதுகள் முறையே 22, 53 மற்றும் 67 ஆகும்.
இவர்களில் சென்னையைச் சேர்ந்தவர் உட்பட மூவரும் தற்போது காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

