பாடசாலைகளில் சிறுவர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு – அமைச்சர் கவலை!
tamil news:
நாட்டின் பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்கொள்கின்ற துன்புறுத்தல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளாா்.
பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மாணவர்களிடையே ஏற்படுவதும்,
அது கல்வி சூழலை பாதிப்பதுமாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பாடசாலைகளுக்குள் மாணவர்கள் அனுபவிக்கும் ஆவணப்படுத்தப்பட்ட துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துவருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
இது தொடர்பில் பள்ளிகளைச்சேர்ந்தோர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
மாணவர்களின் பாதுகாப்பு குறித்து எந்தவொரு சமரசமும் ஏற்கமுடியாதது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த விடயம்,
கொழும்பு மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வு கூட்டமொன்றில் அவர் உரையாற்றும் போது தெரிவிக்கப்பட்டது.

