வைரலாகும் மகிந்த மனைவியின் புகைப்படம்; மீண்டும் சர்ச்சைக்குள் இனப்படுகொலையாளியின் குடும்பம்!
tamil news:
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
சமூக ஊடகங்களில் தற்போது பரவிவரும் ஷிரந்தி பழைய புகைப்படம் அவர் ஜனாதிபதியின் மனைவியாக இருந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக பலராலும் கண்டிக்கப்படுகின்றது.
அந்த புகைப்படத்தில் அவரது காலணிகளை இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் ஏந்திச் செல்வதனை தெளிவாக காணலாம்.
இது அதிகார பதவியின் தவறான பயன்பாட்டை எடுத்துக்காட்டுவதாக சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெறும் அதிகாரத்தின் காட்சிப்படுத்தல்?
"அதிகார திமிரின் வெளிப்பாடு",
"பொது வளங்களை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவது"
போன்ற விமர்சனங்களும் வெளிப்பட்டுள்ளன.
ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பலமுறை எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

