மாலினி பொன்சேகா அஞ்சலி நிகழ்வில் முகஞ்சுழிக்க வைத்த செயல்!!!
tamil news:
சிங்கள திரைப்படத்துறையின் முன்னணி நடிகையாக விளங்கிய மாலினி பொன்சேகா கடந்த 24ம் திகதி,
தனது 78வது வயதில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள், சக நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் வருந்தும் நிலையில், கொழும்பு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் அவரது பூதவுடல் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வின்போது பலரது கவனத்தை ஈர்த்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பிரபல நடிகை, அங்கு அஞ்சலி செலுத்த வந்தபோது சுவாரசியமான முறையில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சிலர் எதிர்பார்க்காத வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு புகைப்படம் எடுத்ததோடு மட்டுமன்றி,
மற்றொரு நபரிடம் சைகை மூலம் தன்னை படமெடுக்குமாறு சொல்லி அருகில் இருந்தவர்களிடம் இடத்தை காலி செய்யுமாறு கூறியதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு,
பலரது கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளன.
சமூகத்தில் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் நிலவுகின்றன.
மாலினி பொன்சேகா, 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததுடன்,
நாடாளுமன்ற உறுப்பினராகவும் முக்கியப் பங்களிப்பு புரிந்தவர்.
இந்திய-இலங்கை கூட்டுத்தயாரிப்பாக உருவான ‘பைலட் பிரேமநாத்’ திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகத்தை பெற்றிருந்தார்.


