மலையக ரயில்சேவை நிறுத்தம்: தடம்புரண்ட ரயில்!!!
tamil news:
நானுஓயா மற்றும் அம்பேவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்றையதினம்(21.05.2025) காலை ரயிலொன்று தடம்புரண்டதை தொடர்ந்து, மலையக பாதைக்கு செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம்(21.05.2025) காலை 9.45 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலே இந்த தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதோடு,
சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
